விடுதலை சிறுத்தைகள் மாநில துணை செயலாளர் மீது கொலை மிரட்டல் வழக்கு
விடுதலை சிறுத்தைகள் மாநில துணை செயலாளர் மீது கொலை மிரட்டல் வழக்கு
விடுதலை சிறுத்தைகள் மாநில துணை செயலாளர் மீது கொலை மிரட்டல் வழக்கு
ADDED : மே 24, 2010 08:50 PM
ஆத்தூர் : விடுதலை சிறுத்தைகள் மாநில துணை செயலாளர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீரகனூர் பகுதியை சேர்ந்தவர் தமிழன் என்ற சுந்தர். இவர் விடுதலை சிறுத்தைகள் மாநில துணை செயலாளராக உள்ளார். இவர் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவது வீட்டில் புகுந்து வீட்டை காலி செய்ய சொல்லி கொலை மிரட்டல் விடுத்து மானபங்க படுத்தியதாக கூறப்படுகிறது.இதனையடுத்து ராஜேஸ்வரி போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் சுந்தர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சுந்தரது தந்தை நடேசன், அவரது சகோதரர்கள் ராஜமாணிக்கம், துரைசாமி ஆகியோருடன் ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த போது, சுந்தர் அவர்களிடமும் கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து நடேசன் மற்றும் அவரது சகோதரர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் சுந்தர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.